×

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் குறைகளை நேரில் தெரிவிக்கலாம்: பொறுப்பேற்ற பின்பு கலெக்டர் பேட்டி

 

செங்கல்பட்டு, ஜன.30:செங்கல்பட்டு மாவட்த்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் பிரித்த பின்பு, மூன்றாவது கலெக்டராக அருண்ராஜ் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவர், ஏற்கனவே தமிழ்நாடு எல்க்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் அருண்ராஜை மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கலெக்டராக பொறுப்பேற்ற பின்னர், அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘இந்த மாவட்டம் பெரிய மாவட்டம். ஏரிகள் நிறைந்த மாவட்டம். சுற்றுலா புகழ் பெற்ற மாவட்டமாகும். 2015ல் காஞ்சிபுரத்தில் பயிற்சி கலெக்டராக பணியாற்றியுள்ளேன். பழனியில் சப்- கலெக்டராகவும், தமிழக அரசின் நீதித்துறையிலும், எல்காட் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளேன்‌.

இந்த மாவட்டத்தை பற்றி நன்கு அறிவேன். செயலாளராகவே சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த மாவட்டத்தில் பணியாற்றியுள்ளார். இது மிக பழமையான மாவட்டம். இன்னும் ஒரு‌ மாதத்தில் இம்மாவட்டத்தை பற்றி நன்கு அறிந்து கொள்வேன். பொதுமக்கள் என்னை‌ நேரடியாக சந்தித்து தங்களின்‌ குறைகளை தெரிவிக்கலாம். அக்குறைகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும்,’’ என்றார்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் குறைகளை நேரில் தெரிவிக்கலாம்: பொறுப்பேற்ற பின்பு கலெக்டர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Citizens of Chengalpattu district ,Chengalpattu ,Collector ,Arunraj ,Chengalpattu district ,Tamil Nadu ,Elkot ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து...